வலைப்பூ அலலது வலைப்பதிவு என்பதும் ஒருவகையில் இணைய தளம் அல்லது இணைய பக்கம்தான். இதில் நாம் உடனுக்குடன் நம்முடைய தகவல்களை எளிதில் ஏற்றிவிட முடியும். நாம் இணைய பக்கங்களை உருவாக்கி பின் சேமித்து (FTP) கோப்பு மாற்றி நெறி மூலம் நம்முடைய வழங்கியுடன் இணைக்க வேண்டும் போன்ற கட்டாயம் இல்லை. மிக எளிதில் உடனுக்குடன் தகவல்களை பதிவு செய்வதற்கும் நமக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் அவர்களின் கருத்துக்களை நாமும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும் மிக எளிய முறையில் வடிவமைக்கப் பட்டு பராமரித்து வருவதுதான் வலைப்பதிவு ஆகும். நாம் முன்பு இரண்டு வகை என்று கூறி இருந்தோம். இதில் உடனுக்குடன் நாம் கருத்துக்களை எளிதில் மாற்றி அமைக்க முடிவதால் இதனை மாறி இணைய தளம் (Dynamic Website) என்ற வகையில் சேர்க்கலாம்.
பிரபலமான அரசியல்வாதிகளும், பிரபல நட்சத்திரங்கள், எழுத்தாளர்கள் தங்களுக்கென வலைப்பதிவு அமைத்திருக்கின்றனர்.தினம் தினம் பல கருத்துக்களை தங்களுடைய நிகழ்ச்சிகளை எழுதி வருகின்றனர்.
திரு எல்.கே.அத்வானியில் வலைப்பதிவு http://blog.lkadvani.in/ இதில் திரு எல்.கே.அதவானி அவர்கள் தொடர்ந்து பதிவு செய்துவருகின்றார்.
நமது துணை முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனக்கென ஒரு வலைபதிவு http://mkstalin.net/blog/ என்ற முகவரியில் தொடங்கி தொடர்ந்து பதிவு செயது வருகிறார்.
http://blog.techsatish.net/ என்ற வலைப்பதிவில் நாம் தினம்தோறும் தொலைக்காட்சியில் பார்க்க தவறும் அனைத்து தொடர்கள் அல்லது முக்கியமான் நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் விளம்பரங்கள் ஏதுமின்றி பார்க்கலாம். பார்த்துவிட்டு உங்களுடைய விமர்சனங்களைப் பதிவு செய்யலாம். விமர்சனங்களைப் படிப்பதே ஒரு சுவாரசியமாக இருக்கும். சிலர் சில நடிகர்களை திட்டி எழுதுவதைப் படிக்கும்போது அவர்களின் நடிப்புத் திறமையை நாம் பாராட்டலாம்.
அணுவை ஆக்க பூர்வமாகவும் பயன்படுத்தலாம் அழிவிற்கும் பயன் படுத்தலாம். அதுபோலவே பல நல்ல வலைப் பதிவுகள் நிறைய செய்திகளையும் படங்களையும் தருவதைப் போல பல வலைப் பதிவுகள் இளைஞர்களைக் கெடுக்கும் செயல்களையும் செய்கின்றன.
நாம் நமக்குத் தெரிந்த செய்திகளையும், நம்முடைய ஊரின் பெருமை அல்லது சுற்றுலாத் தளங்கள் பற்றியோ நம்முடைய மனதில் எழும் சமுதாயக் கருத்துக்களை பலருடன் பகிர்ந்து கொள்ள நாமும் நமக்கென ஒரு வலைப்பதிவை எந்த ஒரு செலவினமும் இன்றி உடனுக்குடன் செய்யமுடியும். இனி நாம் நமெக்கென ஒரு வலைப்பதிவை எப்படி எழுதுவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.
பல நிறுவனங்கள் இலவசமாக வலைப்பதிவு செய்வதற்கு நமக்கு வசதிசெய்து தருகிறார்கள். இலவசமாக வலைப்பதிவுக்கு நமக்கு உதவுபவர்களில் முன்னனி நிறுவனங்களில் சில.
1.கூகில் நிறுவனத்தின் www.blogger.com2.wordpress.com
3.blog.com
4.www.blogeasy.com
5.www.aeonity.com
6.gig4free.com
இதுபோன்ற பல இணைய தளங்களில் நாம் இலவசமாக நம்முடைய வலைப்பதிவை தொடங்க முடியும். எந்த ஒரு இணைய தளத்தில் நாம் ஒரு வலைப்பதிவை தொடங்க நினைத்தாலும் அதற்கென அவர்களிடம் நாம் நம்மைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். நமக்கு ஒரு பயணர் பெயரும், கடவுச் சொல்லும் வழங்குவார்கள். அதனைக் கொண்டு நாம் நம்முடைய பதிவை தொடங்க வேண்டும். ஜிமெயிலில் கணக்கு உள்ளவர்கள் அதனைப் பயன் படுத்தி www.blogger.com ல் வலைப்பதிவைப் பதிவு செய்து கொள்ளலாம். நாம் இப்போது www.blogger.com எவ்வாறு பதிவு செய்வது என்பதைனைத் தெரிந்து கொள்வோம்.

இதில் முதலில் நாம் எந்த மொழியில் எழுத வேண்டும் என்பதை தேர்ந்த்தெடுக்க வேண்டும். நாம் தமிழில் வலைப்பதிவினை இதில் எளிதில் செய்ய முடியும். இதன் சிறப்பு நாம் தமிழ் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அது தமிழில் நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதைப் போன்று வந்துவிடும். இதனை ஆங்கிலத்தில் transliteration என்று அழைப்பார்கள். தமிழில் எழுத்துப்பெயர்ப்பு என்று வழங்கப்படுகிறது. இது தமிழ் ஒருங்குறியீட்டில் (unicode) பதிவாவதால் அனைத்து கணினிகளிலும் எழுத்துருவை (font) பதிவிறக்கம் செய்யாமலேயே படிக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட இந்த இணையதளத்தில் நாம் நம் தமிழ் மொழியைத் தேர்வு செய்தவுடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திரை முற்றிலும் நம் தமிழ் மொழியில் வரும்.
இப்போது நாம் நமது ஜிமெயில் மின்னஞ்சல் பெயரையும், கடவுச் சொல்லையும் பயன்படுத்தி நாம் நம்முடைய வலைப்பதிவை தொடங்கலாம். இந்தப் பக்கத்தில் அழகான டெம்ப்லேட்டுகள் என்று முதலில் இருக்கிறது. Template என்றால் முன்னதாகவே தயாரித்து வடிவமைக்கப்பட்ட பக்கங்கள். பலவகையான பக்கங்கள் இதில் இருக்கும். நாம் நமக்குப் பிடித்த பக்கத்தை தேர்வு செய்து நம்முடைய வலைபதிவை ஆரம்பிக்கலாம்.
இப்போது நாம் ஒரு புதிய வலைப்பதிவு செய்யவிருப்பதால் நாம் நம்முடைய வலைப்பதிவுக்கான பெயரை தேர்வு செய்து கொள்ளவேண்டும். அழகான டெம்ப்லேட்டுகள் அழுத்தினால் பல முன்பே வடிவமைக்கப்பட்ட வலைப் பக்கங்கள் வரும் நாம் நம்முடைய பதிப்பை எளிதில் தொடங்கிவிடலாம். நாம் முதன் மதலில் பதிவை ஆரம்பிக்கும் போது பின் வரும் படத்தில் உள்ளவை வரும். முதன் முறை என்பதால் நாம் நம்முடைய முகவரியை கொடுத்து அந்தப் பெயர் நமக்குக் கிடைக்கிறதா எனவும் இல்லையெனில் தகுந்த மாற்றம் செய்து நம்முடைய வலைபதிவின் பெயரை உருவாக்க வேண்டும். இதில் முதலில் இருப்பது நாம் நம்முடைய வலைப்பதிவிற்கு கொடுக்கப் படும் தலைப்பு. இது எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம். எந்த மொழியிலும் இருக்கலாம். இரண்டாவது உள்ளதுதான் நாம் முன்பு கூறிய உரலி அல்லது URL ஆகும். இதற்கு www வராது. நாம் இங்கே உதாரணமாக gwtraing.blogpost.com என்ற வலைப்பதிவை தொடங்க்குவோம். இந்தப் பெயரை நாம் இருக்கிறதா என சோதித்துப் பார்த்தோம். அது இருக்கிறது. எனவே அதை நாம் நமது உரலியாக (url) எடுத்துக் கொள்வோம். இனி நீங்கள் வேறு பெயர்களில் தேடிப்பார்த்து உங்களுக்கென ஒரு உரலியைத் தொடங்க முடியும்.

இதில் மூன்றாவதாக வருவது நாம் சரியான முகவரியிலிருந்து இயங்கிறோமா என சோதனை செய்ய்ம் வார்த்தை. எனவே அதில் உள்ள வார்த்தையை அப்படியே நாம் பதிவு செய்ய வேண்டும். தவறு எனில் வேறு ஒரு வார்த்தையைக் கொடு்க்கும்.

இதனை முடித்தவுடன் நமக்கு நாம் பதிவு செய்ய வேண்டியவைகளை பதிவதற்கு ஒரு கட்டம் வரும். அதில் நாம் அப்படியே பதிவு செய்ய வேண்டியதுதான். இப்போது நான் இதை அப்படியே நகல் எடுத்து அந்த இடத்தில் ஒட்டிவிட்டு அதை வெளியிட்டுவிட்டேன். அதை எந்த ஒரு கணினியின் உலாவியில் http://gwtraining.blogspot.com/ என்ற முகவரியைக் கொடுத்தாலும் அது இவ்வாறு வந்து விடும்.

இது இந்த நிமிடமே உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டதால் நானே என்னுடைய கருத்தை உடன் தெரிவித்தேன். அதுபோல யார் வேண்டுமானாலும் தங்களுடைய கருத்தை உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.
இதில் மேலே என்னுடைய கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் கீழே Post a Command என்பதற்குக் கீழே ஒரு கட்டம் உள்ளது. அதில் உங்களுடைய கருத்துக்களை நீங்கள் தெரிவிக்கலாம்.
இதில் நாம் படங்கள், நகரும் படங்களையும் இணைக்க முடியும். படங்களை இணைப்பது எப்படி என பார்ப்போம். நாம் நம்முடைய அல்லது நமக்குத் தேவையான படங்களை முதலில் சரியான இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். படங்களை முதலில் நாம் சரியான அளவில் வைத்துக் கொள்ளவேண்டும்.. கோப்பின் அளவு பெரியதாக இருந்தால் நமது பக்கத்தை பார்க்கும் போது அந்த படம் மிக மெதுவாக பதிவிறக்கம் ஆகும். அது உபயோகிப்பாளரை எரிசலூட்டுவதாக இருக்கும். மிக முக்கியமான படமெனில் அப்படியே போடலாம். அல்லது படத்தின் அளவை மிக குறைவாக வைப்பதே நல்லது. www.nilaneer.in என்ற இணையதளத்தில் மாண்புமிகு துணை முதல்வர் மற்றும் மாண்புமிகு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரின் படங்களின் அளவு பெரியதாக இருப்பதால் அவை சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்வதையும் மற்ற படங்கள் எளிதில் வருவதையும் காண முடியும். எனவே படங்களை அளவை குறைத்துக் கொள்ளவேண்டும்.
இந்தமாதிரி வேலைகளை MS photo editor software மூலம் நாம் செய்ய முடியும். ஒருவேலை இந்த மென்பொருள் உங்களிடம் இல்லை என்றாலும் கவலையில்லை. இதற்கென பல மென்பொருள்கள் இணையத்தில் உள்ளன. அவைகளை நாம் பதிவிறக்கம் செய்து உபயோகித்துக் கொள்ளமுடியும். அதேபோல நாம் நம்முடைய படங்களை வியக்கவைக்கும் சில செயல்களையும் செய்ய முடியும். உதாரணமாக அமெரிக்க நாட்டின் டாலரில் நம்முடைய படம் உள்ளதுபோல், செய்தித் தாளில் நம் படம் உள்ளது போல பல வி்னோதங்களைச் செய்து நம் நண்பர்களையும் உறவினர்களையும் வியக்க வைக்கச் செய்யலாம். இதற்கென ஒரு இணையதளம் உள்ளது. அது http://www.photofunia.com இதன் மூலம் செய்யப்பட்ட ஒரு படம்.
நான் இங்கே பல கணினி திரைகளை உங்களுக்கு படங்களாகக் காட்டியுள்ளேன். இந்தப் படங்களை மிக எளிதாக உருவாக்கிவிடலாம். நாம் நமக்குத் தேவையான திரையை விசைப்பலகையில் உள்ள Ctrl+Print Screen ஆகிய இரண்டு விசைகளையும் ஒரு சேர அழத்தினால் அது நமது கணினியின் தற்காலிக நினைவாற்றலில் நகல் எடுத்து வைத்து விடும். நாம் நமக்கு தேவையான இடத்தில் ஒட்டி விடலாம். ஆனால் அதற்கென தனி கோப்பின் பெயர் இருக்காது. என்வே நாம் அதற்கு ஒரு பெயர் இட வேண்டும். அதற்கு நாம் அந்த படத்தின்மீது சுட்டியை வைத்து வலது பக்கத்தினை அழுத்தினால் வரும் மெனுவில் save graphics என்று வரும். இதனை அழுத்தினால் நாம் இதனை படமாக நாம் விரும்பும் png, jpeg, என பலவிதமான formatகளில் எது வேண்டுமோ அப்படி சேமித்துக் கொள்ளலாம்.
இனி இந்தப்படங்களை நாம் எவ்வாறு நமது வலைப்பதிவில் சேர்ப்பது என்பதனைப் பார்ப்போம். நாம் நம் வலைப்பக்கத்தினை எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கவோ அல்லது திருத்தங்கள் செய்யவோ முடியும். www.blogger.comல் நாம் நமது பயணர் பெயரையும் கடவுச் சீட்டையும் பதிவு செய்தோமானால் நம்முடைய பகுதிக்குச் சென்றுவிட முடியும். இங்கே நம்முடைய பத்வுகள் அனைத்தும் வரிசையாக இருக்கும். இதில் நாம் கடைசியாக பதிவு செய்தது முதலில் இருக்கும்.
கீழே உள்ள படத்தில் நாம் கடைசியாக பதிவு செய்த இந்தத் தொகுப்பினைக் கொண்ட வலைபத்திவை காணலாம். ஒவ்வொரு வலைப்பதிவிற்கும் கீழ் New Post, Edit Post, Comments, Settings, Design, Monetize, Stats என்று 7 பிரிவுகள் இருக்கும். கீழே உள்ள படத்தில் இதனை தெளிவாக காணமுடியும். நாம் படத்தை இணைக்க edit postஐ அழுத்த வேண்டும்.
இதில் edit post ஐ அழுத்தியவுடன் நமக்கு கீழே உள்ள திரை வரும். இதில் நாம் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் செய்யலாம்.
புகைப்படம் படமும், நகரும் படச்சுருளின் படமும் இருப்பதைக் காணலாம். நாம் படத்தின் படத்தினை அழுத்தினால் படத்தை எங்கிருந்து எடுக்க வேண்டும் என்று திரையில் தோன்றும். இங்கே நாம் வேறு இணைய தளத்தில் இருக்கும் படங்களைக் கூட இங்கே இணைக்க முடியும். நாம் இப்போது நம்முடைய கணினியில் உள்ள படத்தினை தேர்வு செய்து தேவையான இடத்தில் வைத்துப் பதிவு ஏற்றம் செய்ய வேண்டும். நாம் இப்போது ஏற்றப்படும் படம் ஒரு சில சம்யங்களில் வலைப் பக்கத்தின் ஆரம்பத்திற்கு வந்து விடும். அதனை நாம் வெட்டி நமக்குத் தேவையான இடத்தில் ஒட்ட வேண்டும். நீங்கள் இப்போது கேட்கலாம் ஏன் நம் கணினியில் உள்ள ஒரு படத்தை நகல் எடுத்து இங்கே ஒட்டக்கூடாது என்று. இங்கே நாம் முதலில் நம்முடைய படத்தினை பதிவேற்றம் செய்யும் போது அது இணயதளத்தில் அதற்கென ஒரு உரலியில் பதிவு செய்யப்பட்டுவிடுகிறது. என்வே அந்தப் படத்தினை மட்டுமே நாம் நகல் எடுத்து நாம் நம்முடைய வலைப்பதவில் எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம். நம்முடைய கணினியில் உள்ள படத்தினை நாம் நகல் எடுத்து ஒட்டினால் அது வராது.
இதைப்போலவே நகரும் படத்தைனையும் நாம் இணைக்க முடியும். அடுத்து commends த்தேர்வுசெய்தால் அதில் யார் யார் என்ன என்ன கருத்துத் தெரிவித்தார்கள் என்பதைப் பார்க்கலாம். இந்த வலைப்பத்வின் சொந்தக்காரரான நாம் தேவையற்ற கருத்துக்களை அகற்றிவிட முடியும். நமக்குப் பிடிக்காதக் கருத்துக்களையும் நாம் அகற்ற முடியும். ஆனால் மற்றவர்களின் வலைப்பதிவுகளில் நாம் எதையும் அழிக்க முடியாது. ஆனால் நாம் எதிர்க் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். அவருக்கு அந்தக் கருத்துப் பிடிக்கவில்லை எனில் அவரும் அதை அழிக்க முடியும். அப்படிச் செய்யும் போது நாம் ஒரு வலைப்பதிவில் அதைச் சொல்லிவிட்டால் அவரால் அழிக்க முடியாது.
மூன்றாவதாக setting என்று ஒன்றுள்ளது. இதன் மூலம் நாம் நம்முடைய வலைப் பதிப்பின் தலைப்பு, வலைப்பதிப்பு பற்றிய சுருக்கமான விளக்கம், தேடும் எந்திரத்தில் நம் வலைபதிப்பு வர வேண்டுமா என்ற கேள்வி, நம்முடைய வலைப்பதிப்பில் தமிழில் transliteration மூலம் கருத்க்கூற தமிழைத் தேர்வு செய்ய வசதி போன்றவைகளை தேர்வு செய்யமுடியும்.
நான்காவதாக design என்ற பொத்தானை அழுத்தியதும் நம்முடைய வலைப்பதிவு எப்படி அமைய வேண்டும் என்ற அமைப்பு வரும்.
இதில் நாம் நம்முடைய தலைப்பு, slide show – Edit என்ற பொத்தானை அழுத்தினால் நாம் முன்னதாக இணையதளங்களில் சேமித்து வைத்துள்ள படங்களின் உரலியைக் கொடுக்க வேண்டும். கூகிலின் பிகாசாவில் படங்களைச் சேமித்து வைத்திருந்தால் மிக எளிதில் நாம் நம்முடைய புகைப்படங்களின் இணைப்பைக் கொடுக்கமுடியும். நாம் நம்முடைய பயணர் பெயரைக் கொடுத்தாலே போதும்.
அங்குள்ள படங்களை தானாகவே எடுத்துக் கொண்டுவிடும்.
slideshow – Edit என்ற பொத்தானை அழுத்தியவுடன் இது போன்ற ஒரு தனித் திரை வரும். இதில் Sources என்ற இடத்தில் Picassa Web Albums என்பதைத் தேர்வு செய்து விட்டு அதன் கீழே Option ல் Album தேர்வு செய்தவுடன் பயணர் பெய்ர் என்ற இடத்தில் நம்முடைய பயணர் பெயரைக் கொடுத்தவுடன் நாம் முன்னரே தயாரித்துள்ள ஆல்பமெல்லாம் வந்துவிடும். அதில் நாம் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ள முடியும். ஒவ்வொருமுறை மாற்றங்கள் செய்யும் போதும் நாம் சேமித்துவிட வேண்டும். இல்லையெனில் மாற்றங்கள் நம் வலைபதிவில் பிரதிபலிக்காது.
வலைப்பதிவுகளில் தங்களுடைய வருமானத்தினை உயர்த்திக் கொள்ளவும் வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கு ஐந்தாவதாக இருக்கும் Monetize என்பதனைத் தேர்வு செய்து நாம் நம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும். கூகுலின் அட்சென்ஸ் நிறுவனம் விளம்ரங்களை நமது வலைப் பதிவில் அமைக்கும். அதன் பிறகு நம்முடைய இணைய தளம் பலராலும் பார்க்கப் பட்டு அந்த விளம்பரங்களையும் பார்க்கும் போது நமக்கு பணம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்தமாதிரி விளம்ப்ரங்கள் நம்முடைய வலைப்பதிவில் எங்கு அமைய வேண்டும் என்பன போன்ற நமது விருப்பங்களையும் நாம் கொடுக்க முடியும். கூகிலின் பொதுச் சேவைக்கன ஒரு விளம்ப்ரம் நம்முடைய் வலைப்பதிவில் கூகில் நிறுவனத்தால் இணைக்கப் பட்டுள்ளது. இதற்கு பணம் ஏதும் கொடு்க்க மாட்டார்கள்.
விளம்பரங்கள் மூலம் நாம் பணம் சம்பாதிக்க முடிகிறதோ இல்லையோ நம்மிடம் திறமையிருந்தால் நமெக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவோ நம்முடைய கருத்துக்கள் பலரிடம் சென்றடையச் செய்யவோ முடியும். இது ஒரு dynamic website என்பதால் படிப்பவர்களின் கருத்தினை நாமும் அறிந்து கொள்ள முடியும். இனி உங்கள் கையில்தான் இருக்கிறது.
தமிழ் ஒருங்குறியில் எளிதில் தட்டச்சு செய்ய “அழகி” என்ற மென்பொருளை http://www.azhagi.com/ என்ற இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை நாம் நமது கணினியில் ஏற்றிய பின் விசைப் பலகையில் F10 என்ற விசையை அழுத்திவிட்டு தமிழில் தட்டச்சு செய்யலாம். மீண்டும் ஒருமுறை F10 என்ற விசையை அழுத்தினால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம். நாம் transliteration மூலம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அது தமிழில் நாம் எப்படி உச்சரிக்கிறோமோ அதைப் போன்று வந்துவிடும்.







I have to insert some pictures in the middle some some parts. This will continue
ReplyDeletevery useful to me. I will create a new blog for me
ReplyDeleteமிகவும் அழகாக உள்ளது. பயனுள்ள வகையில் எழுதப்பட்டு இந்த தொகுப்பு பல அறிவியல் இலக்கியவாதிகளுக்கு தனது படைப்புகளை தாய் / தமிழ் மொழியில் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுத கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பாகும். சில இடங்களில் உல்லிகோட்டை வடிவில் இருந்தாலும், போதுமான விவரங்கள் போதுமடசாமி? ஆழ விடு! என்ற அளவில் உள்ளது. அதாவது சர்க்கரை வியாதிக்காரன் இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டது போல் உள்ளது. இது போன்ற விசயங்களை புத்தகத்தை பார்த்து படித்து புரிந்து கொள்வது என்பது தெரிந்தவர் மூலம் பட்டா வாங்கிய கதையாகிவிடும். அனால் திரு தென்னரசன் கொடுத்த இந்த பாடம் இடைதரகர் மூலம் காரியம் சாதிப்பது போல் மிக எளிதாய் இருக்கிறது. என்றும் நன்றியுடன் நாச்சிமுத்து.
ReplyDeleteஎப்படியோ பட்டா வந்ததுபோல சீக்கிரம் வலைப்பதிவும் வந்திடும். நீரின் தன்மைகளையும் சாதக பாதகங்களையும் புட்டுபுட்டு வச்சிடுவீங்கல்ல
ReplyDelete